Home » » யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்
அமைதிப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15 மணியளவில் இப்போராட்டம் இடம் பெற்றது.

 “நினைத்தவுடன் பல்கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர் மையக் கல்வியா?”, “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல?”, “பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா அல்லது கொலைக்களமா?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website