கல்லூரி மாணவர்கள் ஹிமாசலப் பிரதேசத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றனர். அப்போது பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாணவர்கள் 24 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அமர் உஜாலா என்ற இணையத்தில் பிரத்யேகக் காட்சிகளாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆற்றின் நடுவில் உள்ள பாறைகளில் நின்று கொண்டு மாணவர்கள் புகைப்படம் எடுப்பதும், அடுத்த சில நொடிகளில் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, பாறைகள் நீரில் மூழ்கிவிடுவது, அதில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் நீரில் அடித்துச் செல்வதும், சுமார் 2 நிமிடங்களில் இந்தச் சம்பவம் நடந்து விடுவதும், இந்த வீடியோவில் தெரிகிறது. பார்ப்பவர் மனதை உருகச் செய்யும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் பலரால் பகிரப் பட்டு வருகிறது.
Home »
India
,
இந்தியா
,
செய்திகள்
» இந்தியாவில் மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பு
இந்தியாவில் மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பு
Posted by Unknown
Posted on 05:22
with No comments

0 comments:
Post a Comment