Home » , » கடைகள்,சுனாமி வீடுகள் தீவைப்பு, பச்சிளம் குழந்தை உட்பட பலர் படுகாயம் (வீடியோ)

கடைகள்,சுனாமி வீடுகள் தீவைப்பு, பச்சிளம் குழந்தை உட்பட பலர் படுகாயம் (வீடியோ)

தர்ஹா நகரில் 10 கடைகள் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹாநகரில் நேற்று மாலை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்தே மேற்படி பதற்ற நிலை அங்கு உருவாகியுள்ளது.


இரண்டாம் இணைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய இணையத்தளத்தில் வெளியாகியுள்ள காணொளியில் இவ்வாறு இந்த சம்பவம் ஆரம்பிக்கப்பட்டது அதனை யார் முதலில் ஆரம்பித்து வைத்தார்கள் என்று சிலருக்கு குழப்பமாம் அதனால் அவர்கள் இந்த காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையும் அவ்வேளையில் முஸ்லீம் இனத்தவர்களை அமைதியாக இருக்கும்படி அவர்கள் மதத் தலைவர்கள் சமாதானப்படுத்துவதையும் அவ்வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்களை நோக்கி தாக்குதலை நடாத்துவதையும் இக்காணொளியில் காணலாம்.



முன்னைய செய்தி

சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டாராம் ஜானாதிபதி : ட்விட்டரில் சொல்கிறார். 

அது மாத்திரம் அன்றி விசாரணை நடைபெறும் குற்றவாளிகளும் தண்டிக்கப் படுவார்கள் என்றும் ஜனாதிபதி பொலிவியாவில் இருந்து ட்வீட் செய்துள்ளாராம்.


கொழும்பின் புறநகர் பகுதியான அளுத்கமையில் இரண்டு பிரிவு மக்களிடையில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதேவேளை இந்த பதற்றத்தின்போது பொலிஸார் முஸ்லிம்களுக்கு சார்பாக நடந்து கொண்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக இந்த மோதல் சம்பவம் வெடித்துள்ளது.
முஸ்லிம் சிங்கள தரப்புக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுத்கம மீரிபின்ன மற்றும் சாபுல கந்த ஆகிய வீதிகளில் உள்ள வீடுகள் சில தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேத விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை. பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீடியோக்கள்



46 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு வாள் வெட்டு



முன்னைய செய்திகள்


கொழும்பின் புறநகர் பகுதியான அளுத்கமையில் இரண்டு பிரிவு மக்களிடையில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதேவேளை இந்த பதற்றத்தின்போது பொலிஸார் முஸ்லிம்களுக்கு சார்பாக நடந்து கொண்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக இந்த மோதல் சம்பவம் வெடித்துள்ளது.
முஸ்லிம் சிங்கள தரப்புக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுத்கம மீரிபின்ன மற்றும் சாபுல கந்த ஆகிய வீதிகளில் உள்ள வீடுகள் சில தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேத விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.
பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் இணைப்பு
அளுத்தம பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பௌத்த பிக்குவிற்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு இடம்பெற்றதைக் கண்டித்து, இன்று பொதுபல சேனா ஊர்வலம் நடத்தியிருந்தது.
ஊர்வலத்தின்போது முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதையடுத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அளுத்கம தர்ஹா நகரில் 10க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.
பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் இறங்கியதையடுத்து இந்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்களுக்கு கல் வீசப்பட்டிருக்கிறது.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் கல் வீசித்தாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்செயல்கள் பல பகுதிகளுக்கும் பரவியதன் காரணமாக, அபாயகரமான நிலைமை இருப்பதாகவும், குழப்பமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் பதவியிலிருந்து ஹக்கீம் விலகுவதற்குத் தயாராகின்றார்?
அளுத்கமப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அது குறித்து, தற்போது பொலீவியா நாட்டில் 'ஜி.77' நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினார் என நம்பகரமாக அறிய வந்தது.
தமது கடும் விசனத்தை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்குக் கோடி காட்டினார் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து திங்கள் அல்லது செவ்வாய் அவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பார் என்றும் அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி வெளிநாடு போயிருக்கும் இச்சமயத்தில் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





துன்துவையில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் சிங்கள இனவாதிகளால் தாக்கப்பட்டு அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட

முகமட் அஸ்மி (40) 
உமர் சாப் (26) 
முகமட் முயீஸ் (40) 
ஆகிய மூன்று பேரினதும் நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

பேருவள ஓசன் கிரான்ட் வரவேற்பு மண்டபம் தீப்பற்றியெறிகிறது ! 

தர்கா நகர்: 46 நாட்களேயான பச்சிளம் குழந்தையின் தலையில் சிங்கள காடையர்களின் வாள்வீச்சு ! 

துந்துவயில் புதிதாக 3 பஸ்களில் வந்து இனவாதிகள் இறங்கியுள்ள நிலையில் ஊரெல்லாம் ஓலச் சத்தம் கேட்பதாகவும் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதாகவும் தகவல். 

வெலிபிட்டிய பள்ளியை பாதுகாக்க துணிவுடன் எதிர்த்துப் போராடிய முஸ்லிம் இளைஞர்கள்! 

ஒன்றரை மணி நேர போராட்டத்தில் ஏழு பேர் மீது துப்பாக்கி சூடு. ஒருவர் கவலைக்கிடம் ! தர்கா நகர்: விஷேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு 4 முஸ்லிம்கள் இலக்காகி நாகொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் நால்வர் இறந்திருப்பதாகவும் உறுதி செய்ய முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

களுத்துறை: நகர்பகுதியில் வர்த்தக நிலையங்கள் சில தீக்கிரையாகியுள்ளதோடு நக்சபந்திய பள்ளிவாசல் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரை முஸ்லிம்கள் தரப்பில் பிடித்து கட்டிவைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website