Home » » விஜய் - அமலாபால் திருமணம் இனிதே நடந்தேறியது!

விஜய் - அமலாபால் திருமணம் இனிதே நடந்தேறியது!

காதலர்களாக இருந்து வந்த இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும்
இன்று(ஜூன் 12ம் தேதி) இல்லற வாழ்வில் இணைந்துள்ளனர். சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில், இந்துமுறைப்படி இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது.

கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் விஜய். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவர், 'தெய்வத்திருமகள்' படத்தை இயக்கியபோது, அப்படத்தில் நடித்த அமலாபால் உடன் காதல் வயப்பட்டார். இருவரும் தங்களது காதலை ரகசியம் காத்து வந்த நிலையில், சமீபத்தில் இந்த காதல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர், அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருப்பினும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர் இருவரும். பின்னர் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது. அதன்படி ஜூன் 7ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி கேரளாவில் நிச்சயதார்த்தமும் நடந்தது. இதில் மலையாள திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், இவர்களது திருமணம் இன்று(ஜூன் 12ம் தேதி) இந்து முறைப்படி சென்னையில் நடந்தது. மணமகள் அமலாபால் கழுத்தில், மணமகன் விஜய் தாலிகட்டினார். இந்த திருமணத்தில் இருவீட்டாரது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இயக்குநர்கள் பாலா, ஜெயம் ராஜா, மணிரத்னம், சுந்தர்ராஜன், பிரியதர்ஷன் மற்றும் அவரது மனைவி லிசி, பொன்வண்ணன்-சரண்யா, கிரேசி மோகன், கிரேசி பாலாஜி, ஜீ.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி, நடிகர் விக்ரம் மற்றும் அவரது மனைவி, ஆர்யா,சதீஷ், கேமராமேன் நீரவ்ஷா, லுத்புதீன் பாஷா, ஆர்.ஜே.பாலாஜி, சங்கீதா விஜய், நடராஜன், சேம்பர் தலைவர் கல்யாண், மூத்த ஒளிப்பதிவாளர் பாபு, அருள்பதி, யுடிவி.தனஞ்செயன், ஜகபதி பாபு, எடிட்டர் மோகன், பேபி சாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.







Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website