Home » , » காணி சுவீகரிக்கப்படுவதை நிறுத்தக்கோரி அச்சுவேலி மக்கள் ஆர்ப்பாட்டம்

காணி சுவீகரிக்கப்படுவதை நிறுத்தக்கோரி அச்சுவேலி மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். அச்சுவேலி இராணுவ முகாமிற்கு தனியார் காணிகள் சுவீகரிப்பதற்கான, காணி அளக்கும் பணிகள் காணி உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்காக தனியார் காணிகள் சுவீகரிப்பதற்காக காணி அளவிடும் பணிகள் இன்று காலை 9.00 மணியளவில் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட விருந்தது.
அதற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து காணி அளவீடு செய்வதற்காக வந்த நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் திரும்பி சென்றனர்.

இச் சம்பவம் பற்றி காணி உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
நாங்கள் 95ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தோம். 8 மாதங்களின் பின்னர் மீண்டும் நாங்கள் அச்சுவேலியில் குடியேறிய போது அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகம் மற்றும் அதனை சூழ இருந்த எங்கள் 9 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 53 பரப்பு தோட்ட காணிகளை கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தார்கள்.
எமது காணிகளை திரும்ப கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கேட்ட பொழுது விரைவில் கையளிப்பதாக எமக்கு உறுதி அளித்தனர். ஆனால் இன்று 20 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இன்னமும் காணிகள் எமக்கு கையளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு எமது காணிக்குள் இராணுவ முகாமை விஸ்தரிக்கும் நோக்குடன் இராணுவத்தினரால் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டது அதற்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் எமது எதிர்ப்பையும் மீறி கட்டடம் கட்டப்பட்டது.
இந் நிலையில் கடந்த 20ம் திகதி நிலஅளவை திணைக்களத்தால் எமக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அச்சுவேலி இராணுவ முகாமுக்காக காணி சுவீகரிப்பதற்கு 1964ம் ஆண்டின் 28ம் இலக்க காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரகாரம் குறித்த காணியை அளவீடு செய்யும் பொருட்டு 02.06.2014 காலை 9 மணிக்கு காணிக்குள் உட்பிரவேசிக்கவுள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எங்கள் அனுமதியின்றி எங்கள் காணியை அளவீடு செய்ய நாம் அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.
அதேவேளை இராணுவ முகாமுக்காக காணி அளவீடு செய்வதை தடுக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாண சபை சபாநாயகர் சி.வி.கே. சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான சு.சுகிர்தன் பா.கஜதீபன் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பரஞ்சோதி ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அதேவேளை இக்காணிகளை அளவீடு செய்யும் பணிகளை தடுக்கும் நோக்குடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினை பதிவு செய்ய கோரியதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறும், அதற்கான சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகளை தாம் செய்து தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தார்.

(மேலதிக இணைப்பு) யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் படையினரின் தேவைகளுக்காக மக்களுடைய நிலத்தை சுவீகரிப்பதற்காக அளப்பதற்கு மேற்கொள்ளப்ப ட்ட முயற்சிகள் காணி உரிமையாளர்கள் மற்றும் தமிழ்தேசிய கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினையடுத்துக் கைவிடப்பட்டுள்ளது.
அச்வேலி தெற்கு பகுதியில் சுமார் 9குடும்பங்களுக்குச் சொந்தமான 4ஏ க்கர் நிலத்தில் படையினர் கடந்த 1995ம் ஆண்டு தொடக்கம் நிலை கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் தம்முடைய நிலத்தை வி டுவிக்க கோரிக்கை விடுத்துவரும் நிலையில்
கடந்த வாரம் நிலம் சுவீகரிக்கப்போவதாக படையினர் பிரசுரங்களை அனுப்பியிருக்கின்றனர். மேலும் இன்றைய தினம் 02.06.2014ம் திகதி சுவீகரிக்கவுள்ள நிலத்தை அளப்பதற்கு நில அளவையாளர்கள் வந்தி ருந்த நிலையில் மக்கள்
மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீ தரன் மற்றும் வடமாகாணசபை அமைச்சர் பேரவை தலைவர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் ஆகியோர் திரண்டு கடு மையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்நிலையில் நில அளவையாளர்கள் நிலத்தை அளக்காமல் சென்று ள்ளனர். இதேபோன்று கடந்த 2001ம் ஆண்டு நூணாவில் மத்திப கு தியிலிருந்து மக்கள் வெளியேறிய நிலையில் அப்பகுதியில் சுமார் 11 குடும்பங்களுக்குச் சொந்தமான 7ஏக்கர் நிலத்தை
ஆக்கிரமித்த படையினர் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அதனையும் இன்றைய தினம் சுவீகரிப்பதற்காக நில அளவையாளர்கள் மூலம் அளப்பதற்கு முயற்சி எடுத்திருந்த நிலையில் அங்கேயும் நில உரிமையாளர்கள் மற்றும்
தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் திர ண்டு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த நிலையில் நில அளi வயாளர்கள் பின்வாங்கியிருக்கின்றனர். குறிப்பாக அச்சுவேலி பகுதியில் கடந்த 19வருடங்களாகவும்
நூணாவில் பகுதியில் கடந்த 13வருடங்களாகவும் மக்கள் இடம்பெய ர்ந்து மாற்றிடங்களில் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் படையினரின் தேவைகளுக்காக என பகிரங்கமாக குறிப்பிடப்பட்டு மக்களுடைய நில த்தை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மேலும் மக்கள் தாம் இடம்பெயர்ந்து சென்றபோது இருந்த வீடுகள் ம ற்றும் வீட்டிலிருந்த சொத்துக்கள் படையினரால் கொள்ளையிடப்பட்டு வெறும் நிலம் மட்டுமே தற்போது உள்ளதாக சுட்டிக்காட்டியிருப்பதுட ன் மனிதவுரிமைகள் ஆணைக்குழு
யாழ்.அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்களிடம் பல தடவைக ள் முறைப்பாடு கொடுத்தபோதும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவி ல்லை என மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website