Home » » இன்றைய நாள் எப்படி 04.07.2014

இன்றைய நாள் எப்படி 04.07.2014

இன்றைய நாள் எப்படி

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 விருச்சிகம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
இன்றையதினம் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வி. ஐ. பிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website