Home » » இன்றைய நாள் எப்படி 06.07.2014

இன்றைய நாள் எப்படி 06.07.2014

இன்றைய நாள் எப்படி

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புதுப் பொருள் சேரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
காலை 10. 30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
காலை 10. 30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உடல் நிலை பாதிக்கும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 விருச்சிகம்
இன்றையதினம் சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
காலை 10. 30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
காலை 10. 30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website