Home » , » வானத்திலும் போக்குவரத்து நெரிசல் - 200 விமானங்கள் ரத்து

வானத்திலும் போக்குவரத்து நெரிசல் - 200 விமானங்கள் ரத்து


மக்கள் தொகை பெருக்கத்தால் சாலைகளில்
போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும். எதிர்காலத்தில் இந்த சாலை போக்குவரத்து நெரிசலை தவிற்க வானில் பயணிக்கும் வாகனங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

ஆனால், சீனாவில் எதிர்கால போக்குவரத்து இடமான வானிலும் நெரிசல் அதிகரித்து விட்டதாம். சீனாவின், புடாங் (Pudong) மற்றும் ஹாங்கியாவ் (Hongqiao) என்ற இரு விமான நிலையங்களிலும் வானத்தில் விமானங்களின் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த சுமார் 200 விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, 120 விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளன. இது குறித்து விமான துறை அதிகாரிகள் கூறியபோது, சமீப காலங்களில் சீனாவில் அதிக அளவு மக்கள் விமானத்தில் பயணிப்பதால், அதிக அளவு விமானங்கள் வானத்தில் பறக்கின்றன.

மேலும், குறிப்பிட்ட அளவு விமானங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க விடுதல் ஆபத்தில் முடியலாம் என்பதால் இவ்வாறு விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகின்றன.

200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, விமானப்பயணிகள், திண்டாட்டத்திலுள்ளனர்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website