Home » , , , » இலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன

இலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன


இலண்டன் நகரில் கறுப்பு யூலை நினைவேந்தல்
நிகழ்வுகள் கவனயீர்ப்புப் பேராட்டமாக நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தர்.

திடீர் என்று வீதியில் இறங்கிய மாணவர்களும் இளையோர்களும் கறுப்பு யூலை பற்றிய நிகழ்வினை நாடகம் மூலம் வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.

வீதியால் சென்ற மக்கள் நின்று நிதானமாக இளையோர்களின் நடிப்பினை பார்த்தும் அதனால் கொடுக்கப்பட்ட செய்தியினையும் உள்வாங்கி சென்றதை கவனிக்கக் கூடியதாக இருந்தது. மழை ஒருபக்கம் மின்னல் ஒருபக்கம் தாக்க மாணவர்கள் சளைக்காமல் தங்களது தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

அதன் பிற்பாடு இளையோரால் துண்டுபிரசுரங்களும் கொடுக்கப்பட்டன.






Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website