Home » , » உல.கால்பந்து போட்டியை முன்னிட்டு கட்டப்பட்ட பாலம் வீழ்ந்தது

உல.கால்பந்து போட்டியை முன்னிட்டு கட்டப்பட்ட பாலம் வீழ்ந்தது


உலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று
வரும் பிரேசில் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாட்டில் கால்பந்து போட்டி இடம் பெறுவதையொட்டி அங்கு போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அங்கு பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டன. பெலோ ஹாரிஜொந்தே நகரில் கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் இருந்த பாலம் ஒன்று நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.

பாலத்தின் இடிபாடுகளுக்கு இடையே ஒரு பள்ளி பேருந்து உள்பட பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

   

பாலம் இடிந்து விழுந்ததால் அந்த இடமே பெரும் பரபரப்பு அடைந்தது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், 19 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 19 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பாலம் இடிந்து விழும் அதிர்ச்சி காட்சி அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.







Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website