Home » , , , , » நியூஸ்லாந்து அபார பந்துவீச்சு! சுருண்டது இலங்கை

நியூஸ்லாந்து அபார பந்துவீச்சு! சுருண்டது இலங்கை

நியூஸ்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமானது.போட்டியின் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத படி இலங்கை அணி வீரர்கள் திணறினர். இதன்படி இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் அதிகப்படியாக 50 ஓட்டங்களை பெற்றார்.

303 ஓட்டங்களால் பின்தங்கியுள்ள இலங்கை அணி போலோன் முறைப்படி இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது.முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 441 ஓட்டங்களை பெற்றிருந்தது.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website