Home » , , , , » மைத்திரிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது- நந்தன குணதிலக்க

மைத்திரிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது- நந்தன குணதிலக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி குறித்த மக்களின் எண்ணங்களில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாணந்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் நந்தன குணதிலக்க இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் அக்கறை கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

எனவே அடுத்த 10 நாட்களில் தெளிவான மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்க்க முடியும் என்று குணதிலக்க குறிப்பிட்டார்.இதேவேளை முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் 8 பேரும் பிரதேச சபை உறுப்பினர்களும் நேற்று எதிரணியில் இணைந்துள்ளனர்.மேலும் பல விரைவில் எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக குணதிலக்க குறிப்பிட்டார்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website