Home » , , » முல்லைத்தீவில் கடைகள் உடைத்து நுட்பமான முறையில் கொள்ளை!

முல்லைத்தீவில் கடைகள் உடைத்து நுட்பமான முறையில் கொள்ளை!

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பல்பொருள் வணிகக்கடை மற்றும் கடற்றொழில் உபகரண வணிகக்கடை ஆகியவற்றில் நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.


நா.சிவலோகநாதன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் வாணிகக்கடையில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.இந்த நிலையில், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.அத்துடன், சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொலிசாரும் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டல் பகுதியில் பிரபல தமிழ் ஒப்பந்தக்காரர் ஒருவரின் வீட்டில் கொலை, கொள்ளை முயற்சி பொலிசார் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய இச்சம்பவம் மக்களுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

கூரிய ஆயுதங்களின் உதவியுடன் பல கொள்ளையாளர்கள் வாகன உதவியுடன் மேற்கொண்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டதாக ரவிகரன் தெரிவித்தார்.சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே சற்று பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website