Home » » உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய
இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை
உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கும். உடல் மிகப் பெருத்துவிடுமாயின், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இப்படிப் பலப்பல தொல்லைகள் தொடர வாய்ப்புண்டு.
இத்தனை பின்விளைவுகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, உண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. என்னதான் செய்வது என்று சொல்பவர்களா நீங்கள்? பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். வருத்தப் படவேண்டாம். நிரம்பவும் கஷ்டப்படாமல் இளைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று இங்கு பார்க்கப் போகிறோம். முதல் மற்றும் முக்கியத் தேவை என்ன தெரியுமா? உடலை இளைக்க வைத்தே தீருவது என்று தீர்மானித்துக் கொள்வதும், அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதும்தான்.
இனி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றஆலோசனைகளைப் பின்பற்றிப் பாருங்கள்.
1. எதிர்மறைக்(negetive) கலோரி உணவு வகைகளை உட்கொள்ளுதல்:
பட்டினி கிடந்தால் இளைக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் உணவு அருந்தவில்லை என்றால் நமது உடல் சோர்வடையுமே தவிர இளைக்காது. அது மட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம்.
இதற்குப் பதிலாக, நாம் எதிர்மறைக் கலோரி உணவினைச் சாப்பிடவேண்டும். அது சரி, நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன? அதைப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, நம் உடலில் ஆற்றலாகச் சேமிக்கப் படுகிறது. வேலை செய்கையில், இந்த ஆற்றல் செலவழிக்கப் படுகிறது. உணவின் மூலம் பெறும் ஆற்றல் அதிகமாகவும், நாம் செய்யும் வேலைகளில் செலவு செய்வது குறைவாகவும் உள்ளபொழுது, அளவுக்கு அதிகமான ஆற்றல் கொழுப்பாக மாறி நம் உடம்பில் தங்கி, நம்மை குண்டாக்கிவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அளவில் நமது சக்தி செலவாகிறது என்று சொன்னேனல்லவா? அதில், உணவைச் செரிக்கச் செய்யும் வேலையும் அடக்கம்.
பொதுவாக, நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள கலோரிகளை விட, அந்த உணவைச் செரிக்கத் தேவைப்படும் கலோரிகள் குறைவுதான். இதனால், உடலின் ஆற்றல் அளவு ( இந்த ஆற்றல்/சக்தியை, நாம் பணி புரியவோ, நீண்ட தூரம் நடக்கவோ தேவைப்படும் சக்தியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) அதிகரித்து, உடலைப் பருக்க வைக்கிறது.
ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள கலோரிகள் குறைவாகவும், செரிமானத்திற்கு நம் உடம்பால் பயன்படுத்தப் படும் சக்தி அதிகமாகவும் இருக்கும். அதாவது, நம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படி சக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, நம் உடலை இவ்வகை உணவுகள் ஆளாக்குகின்றன. இவற்றையே நெகடிவ் கலோரி உணவுகள் என்கிறோம். இந்த வகை உணவுகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் உட்கொள்கிறோமோ அந்த அளவு, உடலில் சேமிக்கப் பட்டுள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப் படுகிறது.
பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை.
பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு(cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கிழங்கு(asparagus), பீட்ரூட் முதலியன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முதலியன). வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன.
பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை. நிறையவே எடைக்குறைப்பு செய்ய வாழ்த்துக்கள்.
எடை குறைப்பு ஆலோசனைகள் தொடரும்.......
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website