Home » , , , , , , , » விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் (காணொளி)

விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் (காணொளி)

ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ், அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் அட்டூழிங்களை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் ஜோர்டான் (Jordan), சவுதி அரேபியா (Saudi Arabia), கத்தார் (Kathar), பஹ்ரைன் (Bahrain)உள்ளிட்ட நாடுகள் போர்புரிந்து வருகின்றன.

இந்நிலையில் வடக்கு சிரியாவில் தாழ்வாக பறந்த ஜோர்டான் நாட்டு போர்விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ். ஐ. எஸ், அதை ஓட்டிச் சென்ற (Mu'ath Safi Yousef al-Kaseasbeh)என்ற விமானியை நிர்வாணமாக்கி பிணைக்கைதியாக பிடித்து சென்றுள்ளனர்.


இதனையடுத்து சமூக வலைதளங்களில் விமானியின் இரு படங்கள், அவரது நிர்வாண படம் ஒன்று மற்றும் அவருடைய ராணுவ அடையாள அட்டையையும் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். தற்போது தீவிரவாதிகளின் பிடியில் உள்ள விமானியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website