Home » , , , , , , » மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை-அமெரிக்காவில் பதற்றம் (காணொளி இணைப்பு)

மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை-அமெரிக்காவில் பதற்றம் (காணொளி இணைப்பு)

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் விளையாட்டுத் துப்பாக்கி வைத்து மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மிச்சேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, கருப்பினத்தவர்களின் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள பெர்கிலேவில் 18 வயதான கருப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் நடந்த பெட்ரோல் நிலையம் அருகே 60க்கும் மேற்பட்டோர் கூடியதை அடுத்து அந்த பகுதி பொலிசாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது, அங்கு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கொல்லப்பட்ட வாலிபர் அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கியை உயர்த்தி மிரட்டல் விடுத்தான். அதன் பிறகே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மேலும் பலியான கருப்பின இளைஞரின் பெயர் ஆண்டானியோ மார்டின் (Antonio Martin) என்றும் இவனுடன் இருந்த மற்றொரு நபர் துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டவுடன் உயிருக்கு பயந்து தப்பி ஓடி சென்றுள்ளான் எனவும் தெரிவித்துள்ளனர்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website