Home » , , » கொடிகாமத்தில் வாகன விபத்து! குடும்பப் பெண் பலி

கொடிகாமத்தில் வாகன விபத்து! குடும்பப் பெண் பலி



கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந் துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்தவிபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்ணீர் அள்ளிக் கொண்டு வீதியால் சென்ற இரு பெண்கள் மீது வேகமாக வந்த ஹையேஸ் வான் மோதியுள்ளது.

இதனையடுத்து, குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார்.இச்சம்பவத்தில் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த சுதன் சுதா (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தார்.

உலகேந்தியகரன் சுதர்சினி (வயது 20) என்ற இளம் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வானை அடித்து நொறுக்கினர். ஹையேஸ் வானின் சாரதியைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்னர்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website